சென்னை, 22 நவம்பர் 2026 : இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (நவம்பர் 21) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸில் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு, சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ. ராசா, பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திரையுலகைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், நடிகை ராதிகா, நடிகர் பிரபு, இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் எஸ். தாணு உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
கிரிக்கெட் உலகிலிருந்து புவனேஸ்வர் குமார், கேன் வில்லியம்சன், முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அரசியல், திரையுலகம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் ஒரே இடத்தில் திரண்டதால், இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கவனத்தை ஈர்த்தது.







