கோலாலம்பூர், 23 நவம்பர் 2026 : மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, சீன ஓபன் ஸ்குவாஷ் 2026 போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் சடோமி வதனாபே உடல்நலக் குறைவு காரணமாகப் பங்கேற்க முடியாமல் விலகினார். இதனால், போட்டியில் விளையாடாமலேயே சிவசங்கரி வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஹாங்காங்கின் சின் யுக் சானை 11-3, 11-5, 11-8 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சிவசங்கரி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். அந்த ஆட்டம் 24 நிமிடங்களில் முடிவடைந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிவசங்கரியின் இந்த வெற்றி, சர்வதேச ஸ்குவாஷ் அரங்கில் மலேசியாவுக்குக் கூடுதல் பெருமையைச் சேர்த்துள்ளது.







