மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு.

6

நேற்று முன்தினம் விநாடிக்கு 6852 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 19,131 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 18,900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 88.60 அடியாகவும், நீர் இருப்பு 51.06 டிஎம்சியாகவும் உள்ளது. இதேபோல் ஒகேனக்கல் காவிரியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழையால் நேற்று முன்தினம் விநாடிக்கு 6,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து. 16 கண் மதகு பாலம் திறப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த மாதம் 8ம் தேதி 100 அடியை எட்டியது. இதனால் 16 கண் பாலத்தில் அன்று முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று 88 அடியாக சரிந்தது. இதனால் 48 நாட்களுக்கு பிறகு, 16 கண் பாலம் போக்குவரத்திற்கு நேற்று காலை 7 மணி முதல் திறக்கப்பட்டது.