வாஷிங்டன், 21 நவம்பர் 2026 : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு பெண் வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், நாணயத்தைச் சுண்டிப்போட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
அட்லாண்டிக் பீச் நகர கமிஷனர் பதவிக்காக நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜெனிபர் லாக்னர், லிசா ஹெரால்டு ஆகிய இருவரும் தலா 3,162 வாக்குகளைப் பெற்றனர். மறுவாக்கு எண்ணிக்கையிலும் முடிவில் மாற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து, புளோரிடா மாகாணச் சட்டத்தின்படி நாணயத்தைச் சுண்டிப்போட்டு வெற்றியாளரைத் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. ஜாக்சன்வில்லில் உள்ள டுவால் கவுண்டி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூன்று சுற்றுகளில் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெறுபவர் தேர்தலில் வென்றவராக அறிவிக்கப்படுவார் என முடிவு செய்யப்பட்டது.
முதல் சுற்றிலும் இரண்டாவது சுற்றிலும் ஜெனிபர் லாக்னர் வெற்றி பெற்றதால், அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்தத் தேர்வு நடைமுறை வெறும் 20 விநாடிகளில் முடிவடைந்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிசா ஹெரால்டும் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.







