என் தமிழ்

குருத்வாராக்களின் நில உரிமைப் பிரச்சினை : நிலம் மற்றும் சுரங்க அலுவலக அதிகாரிகளுடன் கோபிந்த் சிங் தியோ சந்திப்பு

கோலாலம்பூர், 21 நவம்பர் 2026 : வழிபாட்டுத் தலங்களுக்கான நில உரிமை மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பான பிரச்சினைகள் குறித்து, பல்வேறு குருத்வாரா நிர்வாகப் பிரதிநிதிகள் மற்றும் நிலம், சுரங்க அலுவலகத்தின் (PTG) அதிகாரிகளுடன் கோபிந்த் சிங் தியோ கலந்துரையாடினார்.

சீக்கிய சமூகத்தின் முக்கியமான வழிபாட்டுத் தலங்களாக விளங்கும் குருத்வாராக்களின் சமய மற்றும் சமூகப் பணிகளைப் பாதுகாப்பதுடன், அச்சமூகத்தின் நலன்களையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது அவசியம் என அவர் தெரிவித்தார். தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் நிலையான தீர்வுகளைக் காண முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Scroll to Top