சிலாங்கூர், 21 நவம்பர் 2026 : 2026ஆம் ஆண்டு ஜப்பானின் ஐச்சி, நகோயா நகரங்களில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்த 46 சிலாங்கூர் மாநில வீரர்களில், 17 பேர் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
சர்வதேசப் போட்டிகளில் வீரர்களின் சாதனைகளைப் பாராட்டும் வகையில், சிலாங்கூர் மாநில அரசு மொத்தம் RM89,200 ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. சர்வதேச அரங்கில் மாநிலத்தையும் நாட்டையும் பிரதிநிதித்துச் சிறப்பான சாதனைகளைப் படைத்த வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.








