கனடா, 14 நவம்பர் 2026 : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஓபன்ஏஐ (OpenAI) நிர்வாகக் குழு உறுப்பினர் பால் கிறிஸ்டியானோ எச்சரித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்ற ‘தி ஹிண்டன் லெக்சர்ஸ் 2026’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள்ளேயே இத்தகைய ஆபத்து ஏற்படுவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவது என்பது, உலகில் என்ன நடக்க வேண்டும் என்பதை மனிதர்களுக்குப் பதிலாக AI அமைப்புகளே தீர்மானிக்கும் நிலையை உருவாக்கக்கூடும் என அவர் விளக்கினார்.
மேலும், AI தொழில்நுட்பத்தில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தில் மனித உயிரிழப்புகளுக்கும் காரணமாகலாம் என அவர் எச்சரித்தார். இருப்பினும், தாம் குறிப்பிட்ட காலக்கெடுவும் ஆபத்து குறித்த மதிப்பீடுகளும் துல்லியமான அறிவியல் கணிப்புகள் அல்ல; அவை தமது தனிப்பட்ட மதிப்பீடுகள் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொழில்நுட்பத்தை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.







