என் தமிழ்

RM1 முதல் நேரடி விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் : செல்காம்டிஜி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் புதிய ஸ்ட்ரீமிங் சலுகை

கோலாலம்பூர், 14 நவம்பர் 2026 : செல்காம்டிஜி (CelcomDigi) நிறுவனம், தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் நேரடி விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை குறைந்தது RM1 முதல் பார்த்து மகிழும் வகையில் புதிய ‘ஸ்ட்ரீம்மோர்’ (StreamMORE) சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் சலுகைகள் நவம்பர் 13ஆம் தேதி முதல் செல்காம்டிஜி செயலியில் (CelcomDigi App) பிரத்தியேகமாகக் கிடைக்கும். மாதாந்திர சந்தா கட்டாயமின்றி, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் (EPL), ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட நேரடி விளையாட்டுப் போட்டிகளுடன், ‘கெகார் வாகன்சா’ (Gegar Vaganza), உள்ளூர் தொடர்களான ‘பயாங்கான் டெண்டம்’ (Bayangan Dendam), சீனத் தொடர் ‘When I Meet the Moon’, கொரியத் தொடர் ‘Oh! My Guard’, இந்தோனேசியத் தொடர் ‘Terbaik Itu Kamu’ மற்றும் பிரபலமான அனிமே தொடர்களையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

மூன்று வகையான ஸ்ட்ரீம்மோர் சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ‘StreamMORE Sooka Daily’ சலுகை RM1-க்கு 24 மணி நேரம் நேரடி விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகா பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதியுடன் 500MB அதிவேக இணையத் தரவையும் வழங்குகிறது.

‘StreamMORE Asian Weekly Bundle’ சலுகை RM3-க்கு ஏழு நாட்களுக்கு Viu Premium மற்றும் iQIYI Standard VIP தளங்களில் வரம்பற்ற ஸ்ட்ரீமிங் வசதியையும் 1GB அதிவேக இணையத் தரவையும் வழங்குகிறது.

அதேபோல், ‘StreamMORE VISION+ Premium’ சலுகை RM5-க்கு மாதாந்திர அடிப்படையில் இந்தோனேசிய நாடகத் தொடர்கள், பிரத்தியேகத் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதியுடன் 5GB அதிவேக இணையத் தரவையும் வழங்குகிறது.

கூடுதல் வசதியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ‘StreamMORE Sooka Sports & Entertainment’ சலுகை மாதம் RM15-க்கு கிடைக்கிறது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய இச்சலுகையில், 30 நாட்களுக்கு HD தரத்தில் நேரடி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதியுடன் 5GB இணையத் தரவும் வழங்கப்படுகிறது.

இந்தச் சலுகைகளைச் செயல்படுத்த, வாடிக்கையாளர்கள் செல்காம்டிஜி செயலியைத் திறந்து, ‘Lifestyle’ பகுதியைத் தேர்ந்தெடுத்து, விரும்பிய ஸ்ட்ரீம்மோர் சலுகையைத் தேர்வு செய்து உடனடியாகச் செயல்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு https://cdlink.net/qig4 என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.

Scroll to Top