என் தமிழ்

பெர்கேசோ ஊடக விருதுகள் 2026 : தீபாவளிக் கொண்டாட்டத்துடன் ஊடகவியலாளர்களைக் கௌரவித்த நிகழ்ச்சி

கோலாலம்பூர், 13 நவம்பர் 2026 : மலேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (PERKESO), 2026ஆம் ஆண்டுக்கான ஊடக விருது வழங்கும் நிகழ்ச்சியையும் தீபாவளிக் கொண்டாட்டத்தையும் இணைத்து நடத்தியது. கோலாலம்பூரில் உள்ள ரெனசான்ஸ் கோலாலம்பூர் ஹோட்டல் மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மனிதவளத் துணை அமைச்சர் டத்தோக் கைருல் பிர்தாவுஸ் பின் அக்பர் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமூகப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஊடகவியலாளர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் ‘பெர்கேசோ ஐ-லிந்துங் 2026 ஊடக விருதுகள்’ வழங்கப்பட்டன.

தொலைக்காட்சி மற்றும் காணொளிச் செய்தி, அச்சு ஊடகச் செய்தி, வானொலி மற்றும் ஒலிப்பதிவு நிகழ்ச்சி, இணையச் செய்தித் தளம், சிறந்த புகைப்படம் ஆகிய ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதனுடன், ‘கேசுமா பெர்கேசோ லிந்துங் செமுவா’ சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுடன் நினைவுப் புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் சிறப்புக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சமூகப் பாதுகாப்பு குறித்த துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், பொதுமக்களின் விழிப்புணர்வையும் புரிதலையும் விரிவுபடுத்துவதற்கும் பெர்கேசோவுக்கும் ஊடகத்துறையினருக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Scroll to Top