பெட்டாலிங் ஜெயா, 6 நவம்பர் 2026 : மலேசியாவின் இரண்டாவது உயரமான கட்டடமான மெனாரா மெர்டேக்கா 118-இல் அமைந்துள்ள 118 மால் வணிக வளாகத்தில், செல்காம் டிஜி நிறுவனம் தனது புதிய முதன்மை விற்பனைக் கிளையைத் திறந்துள்ளது. இது நிறுவனத்தின் ‘லைஃப்’ (Life) எனும் நவீன விற்பனைக் கருத்தாக்கத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது கிளையாகும். இதற்கு முன்னதாக கார்டன்ஸ் மால் மற்றும் சன்வே பிரமிட் ஆகிய இடங்களில் இத்தகைய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
புதிய கிளையில் அலைபேசிகள், மின்னணுச் சாதனங்கள், இணைய இணைப்பு, பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் சேவைகள் எனப் பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் முடியும். சாம்சங், டிஸ்னி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளும் சேவைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து செல்காம் டிஜியின் விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகப் பிரிவுத் தலைமை அதிகாரி செங் வெங் ஹோங் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்வதுடன், தொழில்நுட்பம் தொடர்பான ஆலோசனைகளையும் நேரடி அனுபவத்தையும் வழங்குவதில் இத்தகைய விற்பனைக் கிளைகள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
தற்போது மலேசியா முழுவதும் 63-க்கும் மேற்பட்ட நேரடி விற்பனைக் கிளைகள், 300-க்கும் மேற்பட்ட செல்காம் டிஜி எக்ஸ்பிரஸ் கிளைகள் உள்ளிட்ட 10,000-க்கும் அதிகமான விற்பனை மற்றும் சேவை மையங்களை நிறுவனம் கொண்டுள்ளது. புதிய கிளை திறப்பை முன்னிட்டு, ‘பிளே டீல்ஸ்’ (Play Deals) என்ற ஆண்டு இறுதிச் சிறப்புச் சலுகைத் திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் 2026 நவம்பர் 11ஆம் தேதி முதல் 2027 பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும்.
இதன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங், ஹானர் மற்றும் கூகுள் அலைபேசிகளை Easy360 தவணைத் திட்டத்தில் வாங்குவோருக்கு மூன்று மாதங்கள் வரை மாதாந்திர போஸ்ட்பெய்ட் கட்டணத்தில் விலக்கு வழங்கப்படுகிறது. பழைய அலைபேசியை மாற்றிக் கொடுப்போருக்கு RM300 கூடுதல் சலுகையும், PhoneCARE சேவையில் மூன்று மாதங்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படும்.
மேலும், பிளேஸ்டேஷன் 5 டிஸ்க் கன்சோல் வாங்குவோருக்கு நவம்பர் 19ஆம் தேதி முதல் GTA VI Standard Edition விளையாட்டை இலவசமாகப் பெறும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் முன்பதிவு விலை RM299 ஆகும்.
அதேபோல், StreamMORE பொழுதுபோக்குத் தொகுப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு ரோமிங் சேவைகள் மற்றும் அலைபேசி பழுதுபார்ப்புச் சேவைகளுக்கும் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிறப்புச் சலுகைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://cdlink.net/playdeals என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.







