மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நீரிழிவு நோய்க்காக இம்மாத தொடக்கத்தில் டெல்லி ஆஸ்பத்திரியில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 10-ந் தேதி அவர் வீடு திரும்பினார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய உடல் பரிசோதனைக்காக அவர் சமீபத்தில் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் அவர் சிகிச்சை பெற்றும் வரும் மருத்துவமனைக்கு நேற்று இரவு 9:45 மணிக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது அவரது நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் வருகையையொட்டி நேற்று இரவு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Previous Post: இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் பூஜை.