என் தமிழ்

அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு உயர்வு: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு.

ind1

ஆந்திராவில் மாநில அரசு பணியில் சேருவதற்கான வயது வரம்பு 34 ஆக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக அரசு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் 34 வயதை தாண்டிய இளைஞர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் அரசு பணிக்கான வயது உச்சவரம்பு தற்போது 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top