ஆஸ்திரேலியாவில் பொதுமக்களில் ஒருவரை பிடித்து தலையை துண்டிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரதமர் டோனி அப்பாட் உத்தரவின்பேரில் ஆஸ்திரேலியாவில் போலீசார் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் அப்துல்நுமன் ஹைதர் என்ற 18 வயது வாலிபரின் பாஸ்போர்ட் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. அவர் மீது சந்தேகம் அடைந்த தீவிரவாத தடுப்பு போலீசார், அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் 2 தீவிரவாத தடுப்பு போலீஸ் அதிகாரிகளை சரமாரியாக குத்தினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.