கோம்பாக், 30 அக்டோபர் 2026 : 026ஆம் ஆண்டுக்கான புளூபிரிண்ட் மற்றும் ஐ-சீட் (I-SEED) திட்டங்களின் கீழ், கோம்பாக் மாவட்டத்தைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கு மொத்தம் 3,20,700 ரிங்கிட் மதிப்பிலான வணிக உதவிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 27 பயனாளிகளுக்கு புளூபிரிண்ட் திட்டத்தின் கீழ் 2,26,200 ரிங்கிட்டும், 21 பயனாளிகளுக்கு ஐ-சீட் திட்டத்தின் கீழ் 94,500 ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பேக்கரி, உணவு மற்றும் பானங்கள், தையல், உணவு வழங்கல் சேவை, சில்லறை விற்பனை உள்ளிட்ட பல்வேறு வணிகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெறுகின்றனர். மேலும், கோம்பாக் மாவட்டத்தின் சமூகத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்களும் பயனாளிகளில் இடம்பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக, பாப்பராய்டு வேரமன் கோம்பாக் மாவட்டத்தில் உதவி வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு, மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், மக்களின் தேவைகளை நேரில் கேட்டறிந்து, வழங்கப்படும் உதவிகள் உண்மையில் பயனளிப்பதை உறுதிசெய்யத் தொடர்ந்து களப்பணிகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.







