பெட்டாலிங் ஜெயா, 29 அக்டோபர் 2026 : மலேசியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான செல்காம்டிஜி பெர்ஹாட், தனது 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான வாடிக்கையாளர் தினத்தை முன்னெடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 2,600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மின்னிலக்கச் சேவைகள் தொடர்பான அனுபவங்களைப் புரிந்துகொண்டனர்.
வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உரையாடுவதன் மூலம் அவர்களின் கருத்துகளை அறிந்து, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதுடன், நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பண்பாட்டை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.


வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் கருத்துகள், பிற வழிகளில் சேகரிக்கப்படும் பின்னூட்டங்கள் மற்றும் தரவுகளுடன் இணைந்து, அவர்களின் தேவைகள் குறித்த விரிவான புரிதலை உருவாக்க உதவுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
செல்காம்டிஜியின் தலைமைச் செயல் அதிகாரி அல்பெர்ன் மர்ட்டி கூறுகையில், வாடிக்கையாளர் தினம் என்பது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக நன்றி தெரிவிப்பதற்கான முக்கியமான நிகழ்வாகும் என்றார். மலேசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக, மக்களைத் தொடர்ந்து இணைப்பில் வைத்திருப்பதுடன் நம்பகமான சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பையும் நிறுவனம் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நாளில் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் நேரடியாகக் களத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிவதாகக் கூறிய அவர், இத்தகைய சந்திப்புகள் சேவைகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனப் பண்பாட்டை வலுப்படுத்தவும் உதவுவதாகத் தெரிவித்தார்.







