என் தமிழ்

மலாக்கா மாநில அளவில் SPBT தங்க விருது வென்றார் மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் விஜயன்

மலாக்கா, 30 அக்டோபர் 2026 : மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த விஜயன் , 2026ஆம் ஆண்டுக்கான மலாக்கா மாநில அளவிலான பாடநூல் கடனுதவித் திட்ட (SPBT) நிர்வாகத்தில் சிறந்த தலைமைத்துவத்திற்கான தங்க விருதைப் பெற்றுள்ளார். அவரது இச்சாதனையைப் பாராட்டிய மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும், விஜயனுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

பாடநூல் கடனுதவித் திட்டத்தைச் சிறப்பாக நிர்வகிப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, கடமை உணர்வு, தலைமைத்துவம் மற்றும் கடின உழைப்புக்கான அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளது. விஜயனின் இந்தச் சாதனை கல்வித்துறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஊக்கமளிப்பதுடன், பள்ளியின் பெருமையை உயர்த்துவதாகவும் மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top