என் தமிழ்

MDEC தலைமை செயல் அதிகாரி அன்வார் ஃபாரிஸ் பதவிக்காலம் நிறைவு : 2 ஆண்டுகளில் RM180 பில்லியன் டிஜிட்டல் முதலீடுகள்

கோலாலம்பூர், 29 செப்டம்பர் 2026 : மலேசிய டிஜிட்டல் பொருளாதார கழகத்தின் (MDEC) தலைமை செயல் அதிகாரி அன்வார் ஃபாரிஸ் ஃபாட்சில், தனது 2 ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைவதையடுத்து வரும் அக்டோபர் 2-ம் தேதியுடன் பதவியில் இருந்து விலகுகிறார். தனது ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ள விரும்பவில்லை என்றும், MDEC-க்கு வெளியே புதிய வாய்ப்புகளைத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் அனுவார் MDEC நிர்வாகக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அன்வார் தலைமையிலான காலகட்டத்தில், 2025 முதல் 2026 ஆகஸ்ட் வரை 1,000-க்கும் மேற்பட்ட Malaysia Digital (MD) அந்தஸ்து பெற்ற நிறுவனங்களிடமிருந்து சுமார் RM180 பில்லியன் டிஜிட்டல் முதலீடுகளை MDEC ஈர்த்துள்ளது. இந்த முதலீடுகள் மலேசியர்களுக்கு 42,000-க்கும் மேற்பட்ட உயர்மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MDEC தலைவர் கணேஷ் குமார் பங்கா, அன்வார் இரு ஆண்டுகளில் MDEC-ஐ வலுப்படுத்தியதுடன், மலேசியாவின் AI Nation 2030 இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, உயர்மதிப்பு டிஜிட்டல் முதலீடுகள், தொழில்துறை மாற்றம், திறன் மேம்பாடு மற்றும் மலேசியாவில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் MDEC-ன் கவனத்தை அனுவார் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பதவிக்காலம் குறித்து அனுவார் கூறுகையில், MDEC-ஐ வழிநடத்தியது தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்றாக இருந்ததாகவும், அமைப்பு மற்றும் அதன் எதிர்காலத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

Scroll to Top