சிலாங்கூர், 29 செப்டம்பர் 2026 : தீபாவளியை முன்னிட்டு நடத்தப்படவுள்ள மிஸ் சாரீ மலேசியா 2026 அழகிப் போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, செய்தியாளர் சந்திப்பு மற்றும் முக்கிய பங்காளிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி செப்டம்பர் 30ஆம் தேதி சன்வே ஸ்கொயர் மாலில் நடைபெறவுள்ளது.
Dark Dreamerzz Event Management ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அ/மி. பரமேஸ்வரன் சிறப்பு வரவேற்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மிஸ் சாரீ மலேசியா 2026 போட்டி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து போட்டியின் மூலோபாயப் பங்காளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெறுகிறது. மேலும், திரைப்படப் பாடலின் ஒலிப்பதிவு வெளியீடு, பாரம்பரிய சாரீ ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் கலாசார நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
இதனுடன், போட்டியை முன்னெடுப்பதற்கான புதிய மூலோபாய ஒத்துழைப்புகள் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படவுள்ளன. ஊடகங்களுக்கான நேர்காணல் மற்றும் புகைப்பட அமர்வுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு, இந்திய பாரம்பரிய உடையான சாரீ, கலை மற்றும் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் தீபாவளி காலத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. மிஸ் சாரீ மலேசியா 2026 போட்டியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் போட்டி தொடர்பான முக்கிய தகவல்களும் தொடக்க விழாவின் போது அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மலேசியாவில் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை சாரீ ஆடை அலங்காரத்தின் மூலம் முன்னிறுத்தும் நோக்கில் இந்தப் போட்டி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.








