என் தமிழ்

தேசிய அறிவியல் போட்டி 2026 : வெற்றியாளர்களை சந்தித்தார் பிரதமர் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர், 28 செப்டம்பர் 2026 : மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், National Science Challenge (NSC) 2026 பிரதமர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்தார். இந்தப் போட்டியில் SM Tshung Tsin Sabah அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும் அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்தார்.

நாடு முழுவதும் 18,671 அணிகளைச் சேர்ந்த 56,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். மாணவர்களின் படைப்பாற்றல், சிந்திக்கும் திறன் மற்றும் STEM துறையில் உள்ள திறனை தொடர்ந்து வளர்த்து, அறிவும் போட்டித்திறனும் கொண்ட இளைஞர் தலைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Scroll to Top