என் தமிழ்

MADANI Kita @ Damansara Damai : கோபிந்த் சிங் டியோ பங்கேற்பு; 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

சிலாங்கூர், 26 செப்டம்பர் 2026 : MADANI Kita @ Damansara Damai நிகழ்ச்சி, மலேசிய தேசியக் கல்விக்கழகம் ஏற்பாட்டில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் MADANI Rahmah விற்பனை, MADANI Agro விற்பனை, MyDigital ID பதிவு, இலவச சுகாதாரப் பரிசோதனை, சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) சேவைகள் மற்றும் இளைஞர்களுக்கான e-Sports நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.

நிகழ்வை டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு MADANI Rahmah உணவுக் கூடைகளையும் வழங்கினார். பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு வழங்கப்பட்ட பல்வேறு சேவைகள் மற்றும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top