என் தமிழ்

சிலாங்கூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக RM2,500 நிதியுதவி – பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், 10 நவம்பர் 2026 : சிலாங்கூரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் (KIR) கூடுதலாக ஒருமுறை மட்டும் வழங்கப்படும் ரி.ம.2,500 சிறப்பு நிதியுதவியை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிதியுதவி நாளை நவம்பர் 10ஆம் தேதி முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது அழிந்த அத்தியாவசியப் பொருட்களை மீண்டும் வாங்குவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கும் இந்த உதவி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சிறப்பு நிதியுதவியைப் பெறுவதற்கான தகுதி நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட செயல்பாட்டு அமைப்புகள் விரைவில் அறிவிக்கும் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வெள்ளப் பாதிப்பு மீண்டும் ஏற்படக்கூடிய அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top