கோலாலம்பூர், 26 செப்டம்பர் 2026 : மலேசிய இந்தியக் கலைஞர்கள் அறவாரியத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம், ம.இ.கா. தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
துன் ச. சாமிவேலு அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மலேசிய இந்தியக் கலைஞர்கள் அறவாரியம், மலேசிய இந்தியக் கலைஞர்களின் நல்வாழ்வு, திறமையாளர்களுக்கு விருதுகள் மூலம் அங்கீகாரம் வழங்குதல் மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.
கலைஞர்களின் நலனுக்கான சிறந்த திட்டங்களை முன்வைத்து செயல்படுவது அனைவரின் கடமை என டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார். அதேவேளையில், புதிய தலைமுறை இளம் கலைஞர்களையும் அரவணைத்து, அவர்களின் எண்ணங்கள் மற்றும் திட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அனைவரும் ஒன்றிணைந்து கலைஞர் இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் நலனையும் பாதுகாக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராகவும், ம.இ.கா. தேசியத் துணைத் தலைவராகவும் உள்ளார்.







