பினாங்கு, 24 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றத்தின் மகளிர் பிரிவு மற்றும் புக்கிட் பெண்டேரா உள்ளூராட்சி மன்ற மகளிர் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி செப்டம்பர் 19ஆம் தேதி ஹோங் செங் தோட்டம், மவுண்ட் எர்ஸ்கின் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
திரு. முனியாண்டி மற்றும் திருமதி ராஜம்மா இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி தேவாரம், பஜனை, கூட்டுப் பிரார்த்தனை மற்றும் தீப ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து, மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றத்தின் துணைத் தலைவரும் மகளிர் பிரிவு தலைவருமான விவேக ரத்னா நளினி தேவி டி.ஜே.என்., பி.கே.டி., பி.ஜே.கே. சிறப்பிக்கப்பட்டதுடன், அவரைத் தொடர்ந்து சிறப்புரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்றத்தின் பட்டர்வொர்த் மகளிர் பிரிவுத் தலைவர் விவேக ரத்னா பி. லெட்சுமி மற்றும் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து உள்ளூராட்சி மன்ற மகளிர் பிரிவினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இறைவன் சிவபெருமானின் அருளால் அனைவருக்கும் அமைதி, ஒற்றுமை மற்றும் வளம் பெருக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.







