ஜப்பான், 19 செப்டம்பர் 2026 : ஜப்பானின் நாகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2026-ஐ முன்னிட்டு, மலேசிய அணிக்கான வரவேற்பு விழா செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. நாகோயாவில் உள்ள Garden Pier-ல், Athletes Plaza-வின் Athletes’ Interaction Area-வில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை Aichi-Nagoya Asian Games Organizing Committee (AINAGOC) சார்பில் அதன் செயல் தலைமை இயக்குநர் நவோகி மாட்சுய் தொடங்கி வைத்தார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் லாவோஸ், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், தஜிகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய 6 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் மற்றும் OCA அகதிகள் அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசிய அணியின் சார்பில் Chef de Mission முகமது சுமாலி ரெடுவான் தலைமையில் 10 பேர் கலந்து கொண்டனர். அவருடன் துணை Chef de Mission-களான முன்னாள் ஆசிய விளையாட்டுப் போட்டி தங்கப் பதக்க வீரர்கள் முகமது அஸ்லான் இஸ்கந்தர் மற்றும் சையிதாத்துல் அஃபிபா பத்ருல் ஹமிடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், அந்தந்த நாடுகளின் தேசியக் கொடிகளும் ஏற்றப்பட்டன. இது AINAGOC மற்றும் OCA சார்பில் ஆசிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட வரவேற்பை அடையாளப்படுத்தியது. தொடர்ந்து, ஆசிய நாடுகளிடையே அமைதி, நட்பு, ஒற்றுமை மற்றும் நிலையான எதிர்காலத்தை வலியுறுத்தும் வகையில் “Asia Unity Tree-Planting Session” நிகழ்ச்சியிலும் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் பங்கேற்றன.







