பினாங்கு, 19 செப்டம்பர் 2026 : மலேசிய இந்து சங்கம் (MHS) பட்டர்வொர்த் கிளை பெண்கள் பிரிவு, மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில மன்ற பெண்கள் பிரிவுடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி 16 செப்டம்பர் 2026 அன்று பினாங்கு, பட்டர்வொர்த் இந்து இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி தேவாரம், பஜனை, சிறப்பு பிரார்த்தனை மற்றும் தீப ஆராதனையுடன் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒன்றிணைந்து ஆன்மிக ஈடுபாட்டுடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில துணைத் தலைவர் மற்றும் பெண்கள் பிரிவு தலைவரான விவேக ரத்னா நளினி தேவி டிஜேஎன்., பிகேடி., பிஜேகே. அவர்களுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு உரையும் இடம்பெற்றது.
இந்த ஆன்மிக நிகழ்வை ஏற்பாடு செய்த MHS பட்டர்வொர்த் பெண்கள் பிரிவு தலைவி திருமதி ஆர். திலகபதி PJM மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கிளை பெண்கள் பிரிவு நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வு பெண்களிடையே ஆன்மிக ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.







