கோலாலம்பூர், 15 செப்டம்பர் 2026 : மலேசிய தேசிய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம் (PKBM), 2026ஆம் ஆண்டுக்கான Le Tour de Langkawi (LTdL) போட்டியில் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள 8 சைக்கிள் வீரர்களின் ஆரம்பப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை PKBM தலைவர் டத்தோ அமர்ஜித் சிங் கில் வெளியிட்டார். ஆரம்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 8 வீரர்களும் தற்போது இறுதிக்கட்ட பயிற்சி மற்றும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இவர்களில் சிறப்பாக செயல்படும் 6 வீரர்கள் இறுதியாக தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
வீரர்களின் தற்போதைய செயல்திறன், போட்டிக்கான தயார்நிலை மற்றும் அணியின் தந்திரோபாயத் தேவைகள் ஆகியவை இறுதித் தேர்வில் கருத்தில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அணிக்கான இறுதி 6 வீரர்களின் பட்டியல் செப்டம்பர் 25ஆம் தேதி உறுதி செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து Le Tour de Langkawi 2026 போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.







