கோலாலம்பூர், 14 செப்டம்பர் 2026 : இந்திய சமூகத்தைச் சேர்ந்த B40 மற்றும் M40 பிரிவுகளின் தொழில்முனைவோர் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்காக விண்ணப்பிக்கக்கூடிய Uyarvu MADANI 2.0 மானியத் திட்டம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோரின் போட்டித்திறனை அதிகரித்து, வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான மானியம் மற்றும் தொழில் மேம்பாட்டு ஆதரவை வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் Micro பிரிவில் அதிகபட்சமாக RM20,000, Growth பிரிவில் RM35,000 மற்றும் High பிரிவில் RM50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. மொத்தம் 1,116 தொழில்முனைவோருக்கு Uyarvu MADANI மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14, 2026 திங்கட்கிழமை காலை 10.30 மணி முதல் அக்டோபர் 13, 2026 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதி நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு 03-8892 3438, 03-8886 6197, 03-8886 6013, 03-8871 1127 அல்லது 03-8886 6221 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். infomitra@mitra.gov.my அல்லது be@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்புகொள்ளலாம்.
வழிகாட்டுதல்கள் இணைப்பு : https://drive.google.com/file/d/1xtiLLSTRkdcZWzfZh09DxieFjByzyBQL/view
விண்ணப்பப் படிவ இணைப்பு : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScsuiKYVYUJcoT3ONhilRWsjqZ5kjcusMuCMQD4WMmcd_-L5A/viewform








