என் தமிழ்

எபோலா தொற்று : காங்கோவில் 5,000-ஐ கடந்த உயிரிழப்புகள்; உலக நாடுகளுக்கு எச்சரிக்கை !

காங்கோ, 01 நவம்பர் 2026 : ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் 5,026 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் தொடங்கிய இந்தத் தொற்று, காங்கோவின் 26 மாகாணங்களில் எட்டு மாகாணங்களுக்குப் பரவியுள்ளது. ஆயுத மோதல்கள், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்படும் சிரமங்கள் காரணமாகத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் நீடிக்கின்றன.

காங்கோவைத் தொடர்ந்து கென்யா, நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் தொற்று பதிவாகியுள்ளது. தற்போதைய பரவலுக்குக் காரணமான பண்டிபுக்யோ வகை எபோலா வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ குறிப்பிட்ட சிகிச்சை மருந்தோ இல்லை. இதனால், நோயைக் கண்டறிதல், நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவப் பராமரிப்பை விரைவுபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

2014–2016 காலகட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பெருந்தொற்றுக்குப் பிறகு, வரலாற்றில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரண்டாவது மிகப் பெரிய பரவலாக இது கருதப்படுகிறது. இந்நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் சுகாதாரக் கண்காணிப்பும் அவசியமாகியுள்ளன.

Scroll to Top