என் தமிழ்

பிரிக்ஃபீல்ட்ஸில் ‘நல்லி’ புதிய கிளை திறப்பு : உலகளவில் 50-ஆவது விற்பனை நிலையம்

பிரிக்ஃபீல்ட், 11 செப்டம்பர் 2026 : கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் ‘நல்லி’யின் புதிய விற்பனை நிலையம் நேற்று, செப்டம்பர் 10-ஆம் தேதி, கோலாகலமாக திறக்கப்பட்டது. ‘நல்லி மலேசியா’ சார்பில் நடைபெற்ற இந்த கிராண்ட் ஓப்பனிங் நிகழ்வில் பிரத்யேக ஊடக சந்திப்பு மற்றும் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டில் இந்தியா பகுதியில், ஜாலான் துன் சம்பந்தன் எண் 235-235A-C என்ற முகவரியில் இந்தப் புதிய விற்பனை நிலையம் அமைந்துள்ளது. மலேசியாவில் புதிய கிளையைத் திறந்துள்ளதன் மூலம், உலகளவில் நல்லியின் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 50-ஐ எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிளை திறப்பு, மலேசியாவில் நல்லியின் வர்த்தக விரிவாக்கத்தில் முக்கியமான மற்றொரு கட்டமாக அமைந்துள்ளது.

Scroll to Top