என் தமிழ்

இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க ஆய்வு தகவல்

புதுடெல்லி, 11 செப்டம்பர் 2026 : இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த Federation of American Scientists (FAS) வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. FAS-ன் மதிப்பீட்டின்படி, இதில் 160-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ள ஏவுகணை உள்ளிட்ட அணு ஆயுதத் தளவாடங்களுடன் தொடர்புடையவை. மேலும், தயாரிப்பில் உள்ள புதிய தலைமுறை ஏவுகணை அமைப்புகளுக்காக கூடுதல் அணு ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘India’s Nuclear Weapons – 2026’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை FAS-ன் Nuclear Information Project இயக்குநர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் தயாரித்துள்ளார். திறந்தவெளி தகவல்கள், அரசுத் தரவுகள் மற்றும் வணிகரீதியான செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக FAS தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவின் PFBR எனப்படும் விரைவு ஈனுலை அணு உலை எதிர்காலத்தில் அணு ஆயுதங்களுக்குத் தேவையான புளூட்டோனியம் கிடைப்பதை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உலை 80 சதவீத செயல்திறனுடன் இயங்கினால், ஆண்டுக்கு சுமார் 140 கிலோ Plutonium-239 உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகவும், இது கோட்பாட்டளவில் 35 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்க போதுமானதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top