என் தமிழ்

பாரா சுக்மா சிலாங்கூர் 2026 : 49 கிலோ எடைப்பிரிவில் சரவாக் வீரர் ஆன்சன் தியோங் தங்கம்

சிலாங்கூர், 07 செப்டம்பர் 2026 : பாரா சுக்மா சிலாங்கூர் 2026 போட்டியின் ஆடவர் 49 கிலோவுக்கும் குறைவான எடைப்பிரிவு பாரா பளுதூக்கும் போட்டியில் சரவாக் வீரர் ஆன்சன் தியோங் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.vஇப்போட்டியில் சபாவைச் சேர்ந்த மைசோஸ் மஜந்திங் வெள்ளிப் பதக்கத்தையும், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ரூஸைமி ஜொஹாரி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் ஆடவர் 49 கிலோ பிரிவில் சரவாக் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆன்சன் தியோங்கின் இந்த வெற்றி, பாரா சுக்மா சிலாங்கூர் 2026 போட்டியில் சரவாக் அணிக்குக் கிடைத்த முக்கியமான தங்கப் பதக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

Scroll to Top