என் தமிழ்

பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நற்பண்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : இந்து தர்ம மாமன்ற மகளிர் பிரிவு ஏற்பாடு

பினாங்கு, 22 அக்டோபர் 2026 : மலேசிய இந்து தர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலையம் மகளிர் பிரிவு சார்பில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நற்பண்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பினாங்கு, சுங்கை பாக்கார் பகுதியில் அமைந்துள்ள லாடாங் வால்டோர் தமிழ்ப்பள்ளியில் (SJKT Ladang Valdor) நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் மகளிர் பிரிவின் செயலாளர் அம்மா பானு முன்னின்று ஏற்பாடு செய்தார்.

நிகழ்ச்சியில், பினாங்கு மகளிர் நல அமைப்பான WCC-ஐச் சேர்ந்த திரு கணபதி சிறப்புரையாற்றினார். குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களிடையே நற்பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு வாய்ப்பளித்த பள்ளித் தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர் (PK1) மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு முழுமையான ஆதரவு வழங்கிய WCC அமைப்புக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகளின் உரிமைகள் குறித்த புரிதலை மேம்படுத்துவதுடன், மாணவர்களிடையே நல்லொழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதையும் இந்நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டது.

Scroll to Top