இந்தியாவின் புதிய அமெரிக்கத் தூதரக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா நியமனம்.

இந்தியாவின் புதிய அமெரிக்கத் தூதரக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா நியமனம்.

5

 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்போது பொறுப்பு அதிகாரியாக  திரு. கத்லின் ஸ்டீபன் செயல்பட்டு வருகிறார். இவருக்கு பதிலாக அமெரிக்க வாழ் இந்தியரான திரு. ரிச்சர்ட் ராகுல் வர்மாவை நியமிப்பதாக அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். திரு. வர்மா  ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.