என் தமிழ்

பினாங்கில் MCCBCHST 28ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் : மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை குறித்து ஆலோசனை

பினாங்கு, 20 ஆகஸ்ட் 2026 : மலேசிய பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆலோசனை மன்றத்தின் (MCCBCHST) பினாங்கு மாநிலக் குழுவின் 28ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று பினாங்கு கோட்லீப் சாலையில் உள்ள ஜெயா கேட்டரிங் உணவகத்தில் நடைபெற்றது.

MCCBCHST பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ டான் எங் லியோங் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், MCCBCHST தேசிய துணைத் தலைவர் 1 ஸ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ். மோகன் சான் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். கூட்டத்தில் மொத்தம் 20 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு மத சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, தங்களுக்கிடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுவான அக்கறை கொண்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்கான முக்கிய தளமாக இந்த ஆண்டு பொதுக்கூட்டம் அமைந்தது.

பினாங்கில் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் அமைதியான சக வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. மத வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது, சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் பல்வேறு மத சமூகங்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Scroll to Top