21 ஆகஸ்ட் 2026 : கோலாலம்பூர் கேப்போங் பகுதியிலுள்ள SJKT லாடாங் எடின்பர்க் பள்ளியைச் சேர்ந்த ஷைராஸ்ரீ ஸ்ரீதரன், சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற 10ஆவது International Rhythmic Gymnastics Tournament – Brilliant Cup 2026 போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அளவிலான இந்தப் போட்டியில் ஷைராஸ்ரீ மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். ரிப்பன் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் முதலிடம், Free Hand பிரிவிலும் தங்கப் பதக்கம் மற்றும் முதலிடம் பெற்றார். மேலும், பந்து (Ball) பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டாம் இடத்தை கைப்பற்றினார்.
சிறு வயதிலேயே சர்வதேச போட்டியில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள ஷைராஸ்ரீக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமை மூலம் மலேசியாவுக்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.







