என் தமிழ்

கல்யாண சாப்பாடு பெருவிழா : திருமணச் சேவைகளுக்கான கண்காட்சி பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது

பெட்டாலிங் ஜெயா, 04 அக்டோபர் 2026 : திருமணத்துக்குத் தேவையான பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்களை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கல்யாண சாப்பாடு பெருவிழா’ கண்காட்சி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஸ்டார் லைட் அரீனா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அட்வான்ஸ் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்த இந்தக் கண்காட்சியில், ஏராளமான இந்தியத் திருமணச் சேவை நிறுவனங்கள் பங்கேற்றன. திருமணத்துக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளையும் வணிகச் சேவைகளையும் கண்காட்சிக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தின.

திருமண ஏற்பாடுகள் தொடர்பான பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு, அவற்றை வழங்கும் நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியது. இந்திய வணிகர்களுக்கு அவ்வப்போது பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வரும் கவிமாறனும் கண்காட்சியில் கலந்து கொண்டார்.

Scroll to Top