சைபர்ஜெயா, 12 ஆகஸ்ட் 2026 : மலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் 48ஆவது தேசிய திருமுறை ஓதும் விழா 2026, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் காலை 7.30 மணி முதல் நடைபெறவுள்ள இவ்விழா, திருமுறை மரபைப் பேணுவதையும், அதன் ஆன்மிகப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பக்தி, ஒற்றுமை மற்றும் சமூக சேவையுடன் அனைவரும் ஒன்றிணைந்து திருமுறை ஓதலில் பங்கேற்க மலேசிய இந்து சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. திருமுறையின் தெய்வீகப் பெருமையை உணர்ந்து, சைவ நெறியில் வாழ்வதற்கான ஆன்மிகப் பயணமாக இவ்விழா அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“திருமுறை ஓதுவோம்… சிவநெறியில் வாழ்வோம்…” என்ற கருத்துடன் நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.







