என் தமிழ்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 : மலேசிய வீராங்கனை ஷமலாராணி சந்திரனுக்கு கராத்தேவில் தங்கம்

ஜப்பான், 26 செப்டம்பர் 2026 : 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2026-ல், மகளிர் கராத்தே குமித்தே 50 கிலோ எடைப் பிரிவில் மலேசிய வீராங்கனை ஷமலாராணி சந்திரன் தங்கப் பதக்கம் வென்றார். செப்டம்பர் 23 அன்று ஜப்பானின் டொயோஹாஷி ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷமலாராணி சந்திரன் முதலிடம் பிடித்து மலேசியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்தார்.

மலேசிய தேசிய ஒலிம்பிக் கவுன்சில் துணைத் தலைவரும் மலேசிய கராத்தே சம்மேளனத் தலைவருமான டாக்டர் நூர் அஸ்மி அகமது, போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார். ஹாங்காங்கின் யீ டிங் சாங் வெள்ளிப் பதக்கமும், பிலிப்பைன்ஸின் மேரி ஜூன் அட்ரியானோ மற்றும் மக்காவின் மேன் வை ஃபோங் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களும் வென்றனர்.

Scroll to Top