என் தமிழ்

டிரம்ப் மீடியா நிறுவனத்துக்கு 238 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு

வாஷிங்டன், 11 ஆகஸ்ட் 2026 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ‘Truth Social’ சமூக ஊடகத் தளத்தின் தாய் நிறுவனமான Trump Media & Technology Group, ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 238.1 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர இழப்பை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் 20 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மட்டுமே பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு இழப்பு சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

நிறுவனம் வைத்திருந்த டிஜிட்டல் சொத்துகள், அடமானமாக வைக்கப்பட்ட டிஜிட்டல் சொத்துகள் மற்றும் பங்கு பத்திரங்களின் மதிப்பு சரிந்ததே இழப்பு அதிகரித்ததற்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு சரிவால் மட்டும் 190 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு வருவாய் 1.7 மில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 89 சதவீத அதிகரிப்பாகும். முன்னதாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டிலும் Trump Media & Technology Group குறிப்பிடத்தக்க நிகர இழப்பை பதிவு செய்திருந்தது. கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துகளின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு அந்த இழப்பிலும் முக்கிய பங்கு வகித்திருந்தது.

Scroll to Top