என் தமிழ்

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது

புதுடெல்லி, 11 ஆகஸ்ட் 2026 : காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது. காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய நீர் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மாதந்தோறும் கூடி வரும் நிலையில், அதன் துணை அமைப்பான காவிரி நீர் ஒழுங்காற்று குழுவுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை. தேவைக்கேற்ப இக்குழு கூட்டப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கர்நாடகா ஆகஸ்ட் மாதத்தில் 45.5 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 88 டிஎம்சி நீர் திறக்கப்பட வேண்டியிருந்த நிலையில், இதுவரை 10 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top