என் தமிழ்

சந்தோஷ் நாராயணன்–மன்னர் முத்து கூட்டணியின் ‘மன்னாரு’ பாடல் வெளியானது

10 ஆகஸ்ட் 2026 : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் மன்னர் முத்து இணைந்து உருவாக்கிய புதிய இசை ஆல்பத்தின் முதல் பாடலான ‘மன்னாரு’ வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் முக்கிய இசைத் தளங்களில் இப்பாடல் வெளியாகியுள்ளது. ‘ரகிட’ என்டர்டெயின்மென்ட் சார்பில் உருவாகியுள்ள இப்பாடலை மன்னர் முத்து தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார். பாடலாசிரியர்கள் கே. காட்டியன் மற்றும் கானா பிரான்சிஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

கென் ராய்சன் இயக்கியுள்ள ‘மன்னாரு’ பாடல், விறுவிறுப்பான காட்சிகளுடன் உற்சாகமான இசையையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன்–மன்னர் முத்து கூட்டணியின் முதல் இசை வெளியீடாக அமைந்துள்ளதால், இசை ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையிசையில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள சந்தோஷ் நாராயணன், ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘மன்னாரு’ பாடல் புதிய இசைப் பயணத்தின் தொடக்கமாக அமையும் என பாடல் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Scroll to Top