என் தமிழ்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவப் பரிசோதனை – இரண்டு நாட்கள் தீவிர கண்காணிப்பு

10 ஆகஸ்ட் 2026 : மலேசிய பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தேவையான மருத்துவ நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். பிரதமரின் உடல்நிலை சீராகவும் நன்றாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் இரண்டு நாட்களுக்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள், அவரை கவனித்து வரும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் மதிப்பீட்டுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமரின் மருத்துவப் பரிசோதனைகள் சுமுகமாக நடைபெறவும், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் இருந்து விரைவில் வழக்கமான பணிகளுக்குத் திரும்பவும் பொதுமக்கள் பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தகவலை பிரதமரின் மூத்த செய்திச் செயலாளர் டுங்கு நஷ்ருல் அபைதா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Scroll to Top