என் தமிழ்

SUKMA 2026 மற்றும் Para SUKMA ஓட்டப் போட்டி தொடக்கம் – ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்பு

செப்பாங், 09 ஆகஸ்ட் 2026 : SUKMA XXII மற்றும் Para SUKMA Selangor 2026 போட்டிகளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட SUKMA 2026 Run மற்றும் Para SUKMA Selangor Run நிகழ்ச்சியின் தொடக்க விழா செப்பாங் நகராட்சி மன்றத்தில் நடைபெற்றது.

செலாங்கூர் மாநில மந்திரி பெசார் YAB டத்தோ’ ஸ்ரீ அமிருடின் பின் ஷாரி தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், செலாங்கூர் மாநிலச் செயலாளர் YB டத்தோ டாக்டர் அஹ்மத் ஃபட்ஸ்லி பின் அஹ்மத் தாஜுடின், இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவு விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் YB முகமட் நஜ்வான் பின் ஹலிமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், SUKMA XXII மற்றும் Para SUKMA Selangor செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமட் யாசிட் பின் சாய்ரி, MSNS நிர்வாக இயக்குநர் முகமட் நிசாம் பின் மர்ஜுகி, செப்பாங் மாவட்ட அதிகாரி கைரி அசாலி பின் இப்ராஹிம் மற்றும் செப்பாங் நகராட்சி மன்றத் தலைவர் டாக்டர் அனி பிந்தி அஹ்மத் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செப்பாங் சர்வதேச சுற்றுப்பந்தயத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் SUKMA XXII மற்றும் Para SUKMA Selangor 2026-க்கான Mega Volunteer Gathering நிகழ்வும் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் ஒன்றுகூடி, நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றை வெற்றிகரமாக நடத்துவதற்கான தங்களது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.

SUKMA மற்றும் Para SUKMA 2026 போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான சமூகப் பங்களிப்பு மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

Scroll to Top