என் தமிழ்

தாப்பா மகா மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதி விழாவில் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் பங்கேற்பு

தாப்பா, 08 ஆகஸ்ட் 2026 : தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்து கொண்டு, பக்தர்களுடன் இணைந்து சிறப்பித்தார்.

மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா, இந்து சமயப் பாரம்பரியம் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக இடம்பெற்று வருகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டதுடன், சிறப்பு பூஜைகள் மற்றும் சமய நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

இத்தகைய சமய மற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் சமூகத்தின் ஒற்றுமையையும் ஆன்மிக உணர்வையும் வலுப்படுத்துவதுடன், நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் கலாசார மரபுகளைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

Scroll to Top