என் தமிழ்

ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ்: JanjiAI பெட்ரினா கோப்பையில் பத்மினி விக்னேஸ் ஹரனுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்

08 ஆகஸ்ட் 2026 : கோலாலம்பூரில் உள்ள SMK St. Mary பள்ளி மாணவி பத்மினி A/P விக்னேஸ் ஹரன், 3-வது JanjiAI Petrina Cup Malaysia Rhythmic Gymnastics International Tournament போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து சிறப்பான சாதனை படைத்துள்ளார். ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் மலேசிய அணிக்காக பங்கேற்ற பத்மினி, Clubs Routine பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், Hoop Routine பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். அவரது சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு Certificate of Merit-உம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெற்ற இப்போட்டி 2026 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1 வரை புக்கிட் ஜாலிலில் உள்ள National Sports Council Gymnasium 2-ல் நடைபெற்றது. Malaysia Rhythmic Gymnastics Federation உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Clubs மற்றும் Hoop ஆகிய இரு பிரிவுகளிலும் பதக்கம் வென்றதன் மூலம் பட்டமினி தனது திறமையையும் தொடர்ச்சியான பயிற்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, மலேசிய அணியைப் பிரதிநிதித்து சர்வதேச அரங்கில் பதக்கங்களை வென்றிருப்பது அவரது விளையாட்டு வாழ்க்கையில் முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.

பட்டமினியின் இந்த வெற்றி SMK St. Mary பள்ளிக்கும் மலேசியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறன், சக மாணவர்களுக்கும் இளம் விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்த ஊக்கமாக அமையும் என்றும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top