என் தமிழ்

‘கண்ணம்மா – The Love’ இசை, நாட்டிய நிகழ்ச்சி : டிக்கெட்டுகள் முன்பதிவு தொடக்கம்

08 ஆகஸ்ட் 2026 : மலேசிய பாரம்பரிய மற்றும் கலை மரபுக் கழகம் (Persatuan Kebudayaan & Kesenian Warisan Malaysia) சார்பில் ‘கண்ணம்மா – The Love’ எனும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. காதலின் அழகையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் கலை வடிவில் வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கர்நாடக இசை மற்றும் நேரடி இசைக்குழுவின் இசை நிகழ்த்தல் ஆகியவை இடம்பெறவுள்ளன.

கலை, இசை, நடனம் மற்றும் காதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கு தனித்துவமான மேடை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி 2026 ஆகஸ்ட் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள Shantanand Auditorium-ல் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் நான்கு வகைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. Love பிரிவு RM110, Arpanam பிரிவு RM75, Jayam பிரிவு RM55, Guru பிரிவு RM35 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு நிகழ்ச்சி விளம்பரத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது +6016-243 8182 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

காதல், இசை மற்றும் நாட்டியத்தின் அழகிய சங்கமமாக அமையவுள்ள ‘கண்ணம்மா – The Love’ நிகழ்ச்சியில் கலை ரசிகர்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Scroll to Top