கோலாலம்பூர், 06 நவம்பர் 2026 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மலேசியாவின் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 50 விழுக்காடு சுங்கக் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுவதாகப் பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.
இந்தச் சிறப்புச் சலுகை நவம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி, நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.59 மணி வரை இரண்டு நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், முதல் வகுப்பு தனியார் வாகனங்களுக்கு (Class 1) அனைத்து சுங்கச்சாவடிகளிலும் 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும். பினாங்குப் பாலத்தில் இரண்டாம் வகுப்பு வாகனங்களுக்கும் (Class 2) இந்தச் சலுகை பொருந்தும்.
இருப்பினும், வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் (BSI) சுங்கச்சாவடி மற்றும் மலேசியா–சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புச் சாலையில் உள்ள தஞ்சோங் கூபாங் (TTK) சுங்கச்சாவடி ஆகியவற்றுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது.
இந்தக் கட்டணத் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைச் சலுகை நிறுவனங்களுக்கு RM20.11 மில்லியன் இழப்பீட்டை அரசாங்கம் வழங்கும் என்றும், போக்குவரத்துத் தரவுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் இத்தொகை உறுதிசெய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் பயணச் செலவைக் குறைப்பதுடன், குடும்பத்தினரைச் சந்திப்பதற்கான பயணங்களை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட வேண்டும் என்றும், Touch ’n Go அட்டைகள் அல்லது மின்னணுப் பணப்பைகளில் (eWallet) போதிய பண இருப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேக வரம்புகளைக் கடைப்பிடித்தல், பாதுகாப்பான இடைவெளியைப் பேணுதல், வாகனம் ஓட்டும்போது சோர்வைத் தவிர்த்தல் ஆகியவற்றுடன், பயணத்திற்கு முன்பும் பயணத்தின்போதும் லெம்பாகா லெபுஹ்ராயா மலேசியா (LLM) வெளியிடும் அதிகாரப்பூர்வ போக்குவரத்து அறிவிப்புகள் மற்றும் சாலை நிலவரங்களைப் பின்தொடருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இறுதியாக, அனைத்து இந்து மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த பொதுப்பணித் துறை, இத்திருநாள் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், மலேசிய மக்களிடையே ஒற்றுமையை







