என் தமிழ்

மலேசிய இந்து சங்கத்தின் 48-வது திருமுறை பாராயண விழா : 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பினாங்கு, 07 ஆகஸ்ட் 2026 : மலேசிய இந்து சங்கம் (Malaysia Hindu Sangam) ஏற்பாடு செய்த 48-வது திருமுறை பாராயண விழா 2026, 1,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், பெற்றோர் மற்றும் பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.

இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைத்து போட்டியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், நடுவர்கள், நிதியுதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மலேசிய இந்து சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருமுறை மரபை பாதுகாத்து, அதன் ஆன்மிகப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பணியை தொடர்ந்து முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நிகழ்வை முன்னிட்டு திருக்குறள் 391-ஐ மேற்கோள் காட்டிய மலேசிய இந்து சங்கம், “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, கற்ற நற்பண்புகளை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Scroll to Top