என் தமிழ்

50 ஆண்டுகால பங்களிப்புக்கு தாய்லாந்து அரச விருது பெற்றார் OCM தலைவர் டான் ஸ்ரீ தர்ஷன் சிங் கில்

07 ஆகஸ்ட் 2026 : மலேசிய விளையாட்டுத் துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி, மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCM) தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் எம். தர்ஷன் சிங் கிலுக்கு தாய்லாந்து அரசின் உயரிய விளையாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து மன்னரின் அனுமதியுடன் வழங்கப்படும் இந்த அரச விருது, விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் அவர் வழங்கிய அர்ப்பணிப்பு சேவைக்கான அங்கீகாரமாகும். தர்ஷன் சிங் கில், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிர்வாகத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்ததுடன், மலேசிய விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்திற்கும் ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இந்த விருது, மலேசிய விளையாட்டுத் துறைக்கும் சர்வதேச அரங்கில் நாட்டின் நற்பெயருக்கும் கிடைத்த பெருமையாகும் என்றும், இது விளையாட்டு நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஊக்கமளிக்கும் அங்கீகாரமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய விளையாட்டுத் துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரும், டான் ஸ்ரீ தர்ஷன் சிங் கிலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top