என் தமிழ்

தேசிய 18 வயதுக்குட்பட்ட பேட்மிண்டன் : 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது கோலாலம்பூர்

கோலாலம்பூர், 03 ஆகஸ்ட் 2026 : 2026 பெட்ரோனாஸ் தேசிய 18 வயதுக்குட்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான கலப்பு அணி பேட்மிண்டன் போட்டியில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாலம்பூர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் கெடா அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்திய கோலாலம்பூர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் தியான் சி யீ–வெங் யான் லீ இணை, கெடாவின் முகமது டேனிஷ் ஹைகால்–நுரின் ஜஹிரா இணையை 15-8, 15-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்து கோலாலம்பூருக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஓங் சின் ரூ, லாவ் சின் என்னை 13-15, 15-9, 15-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் கை சுவான் லியூ–வோங் மெங் ஃபோங் இணை 15-10, 14-15, 15-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் பிரிவில் தியான் ஹாவ் லியூ, ஜோஷுவா கருணாகரனை 15-11, 15-4 என்ற கணக்கில் தோற்கடித்து கோலாலம்பூரின் வெற்றியை உறுதி செய்தார்.

இதற்கிடையில், இரண்டு முறை தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற பினாங்கு அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய சிலாங்கூர், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

ஒரு வார காலமாக நடைபெற்ற போட்டியில் அனைத்து மாநில அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் ஏற்பாட்டாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Scroll to Top